காகில்ஸ் வீரர்கள்

காகில்ஸ் புட்சிட்டி நாம், ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு வீரரே என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் ஒவ்வொருவரும் தன்னகத்தே கொண்டுள்ள அளவற்ற ஆற்றலை நினைவுபடுத்தி உத்வேகமளிக்கும் தளமாகவும், அத்துடன் அசாத்தியமான முயற்சிகளால் மகத்தானவர்களாக உயர்ந்த, அவர்களது வாழ்வுடன் இணைந்திருப்பதை ஒரு கௌரவமாக எம்மை உணரச் செய்தவர்களில் ஒரு சிலரது வெற்றிக் கதைகளை அங்கீகரிப்பதற்குமான ஒரு முன்னெடுப்பே "வீரர்கள்" ஆகும்.

நாம் ஒன்றிணைந்தால் எம்முடைய, எம் அன்பிற்குரியவர்களுடைய வாழ்வை மட்டுமல்லாது எண்ணிலடங்கா பலரது வாழ்வில் மகத்தானதொரு மாற்றத்தை உருவாக்கலாம் என்பதையே இம் முன்னெடுப்பு எமக்கு சொல்கிறது.