வீரர் என்பவர் யார்?

எம் அனைவருக்குமே வீரர்கள் என்றால் யார் என்பதில் வேறுபட்ட அபிப்ராயங்கள் உண்டு. நடைமுறை வரைவிலக்கணங்களைக் கொண்டு நாம் ஒரு சிலரை மாத்திரமே வீரர்களென ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒருவரை வீரர் என அடையாளப்படுத்துவதில் தைரியம், குறிக்கோள், போராடும் குணம், முயற்சி, ஆர்வம், அன்பு, அர்ப்பணிப்பு அத்துடன் முக்கியமாக அவர்கள் அக்கறை கொண்டுள்ள விடயம் என பல காரணிகள் பங்கேற்கும் பொழுது ஒவ்வொருவருமே தம் வாழ்வில் ஒரு வீரரே என்பதை யாராலும் மறுக்க முடியமா?

காகில்ஸ் புட்சிட்டி நாம், அதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனாலேயே நாம் எமது விவசாயிகள், தொழில் முயற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரையுமே வீரர்களாகப் பார்க்கிறோம். இந் நம்பிக்கையே இவர்கள் ஒவ்வொருவரதும் வெற்றிக் கதையை கௌரவித்து அவர்களது முயற்சியை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டுள்ள எமது “வீரர்கள்” முன்னெடுப்புக்கு காரணமாக அமைந்தது.

குறிக்கோள்

எமது கதையின் மையக்கரு உத்வேகம் ஆகும். எமது வீரர்களுக்கு கௌரவமளிக்கும் அதேவேளை, அதற்கு அப்பால் சென்று எமது தேசத்தின் ஆயிரக் கணக்கான நாளாந்த வீரர்களின் வாழ்விலிருந்து எம் அனைவருக்குமான உத்வேகத்தைப் பெற்றுக்கொள்வதே எமது குறிக்கோள். சாதாரண மக்களின் அசாத்தியமான இலக்குகளை நோக்கிய பயணத்தின் மகத்தான கதைகள், அவர்களது சளைக்காத நம்பிக்கை, விடா முயற்சி, போராடும் குணம், சாதனைகள் என்பவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாம் முயற்சிக்கிறோம். இவ் வீரர்கள் வாழ்வின் வௌ;வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இம் முன்னெடுப்பில் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வை சந்தித்ததையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். நாம் ஒன்றிணையும் பொழுது மேலும் பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை மாற்றியமைக்க முடியும் என்பதோடு, அவர்களை தம் வாழ்வில் வீரர்களாக திகழச் செய்து அதன் மூலம் இலங்கையின் வீரர்களாக ஆக்கிடும் உத்வேகத்தையும் எம்மால் வழங்க முடியும்.

“வீரர்கள்” முன்னெடுப்பின் செயற்பாடுகள்

தமது வாழ்வை வளமாக்கும் முயற்சியில் முழு தேசத்தையும் வளமாக்கும் வீரர்களான உள்நாட்டு விவசாயிகளுடனான எமது உறவு ஹங்குராங்கெத்தவில் அமைக்கப்பட்ட முதலாவது காகில்ஸ் புட்சிட்டி சேகரிப்பு நிலையத்துடன் ஆரம்பித்தது. இன்று அவ் உறவு மென்மேலும் வலிமை பெற்றுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு உதவும் வளமிக்க நிலம் செயற்திட்டத்தின் மூலம் ஆயிரக் கணக்கான விவசாயிகளின் வாழ்வையும், ஜீவனோபாயத்தையும் அவர்கள் தம் மரபுகளையும் செழுமையாக்கிட நாம் உதவினோம். வளமிக்க நிலம் செயற்திட்டத்தின் ஊடாக விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொரு கிலோகிராம் காய்கறி மற்றும் ஒவ்வொரு லீட்டர் பாலுக்கு 50 சதம் வீதம் நாம் வேறாக்கினோம். அத்தொகை விவசாயப் பிரஜைகள் விருதுகள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் எமது மண்ணைக் காப்போம் ஆகிய ஊக்கமளிப்பு செயற்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. (.. செயற்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பிரவேசியுங்கள்) இவ் உலகம் அரிதாகக் காணும் வீரர்களே தொழில் முயற்சியாளர்கள். மாற்றங்களை உருவாக்குவதற்கான அவர்களது இடைவிடாத முயற்சியில் அவர்கள் தாம் வெற்றி காண்பது மட்டுமல்லாது முழு தேசத்தையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். அதனாலேயே நாம் அவர்களின் முயற்சிகளில் தொடர்ந்தும் முதலீடு செய்கின்றோம். காகில்ஸ் புட்சிட்டி நாம் எமது குடும்பத்தோடு இணைந்துள்ள 8000 ஊழியர்களையும் வீரர்களாகவே பார்க்கிறோம். அவர்களின் வாழ்வு அர்ப்பணிப்பாலும், கடின உழைப்பாலும், திட நோக்கத்தாலும் ஆக்கப்பட்டிருப்பதோடு, தங்கள் அன்பிற்குரியவர்களது வாழ்வை மேம்படுத்துவதுடன் நின்றுவிடாது உங்கள் முகங்களிலும் புன்னகையை வரவழைப்பதாக அமைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் எமது பயணம் வாடிக்கையாளராகிய நீங்கள் அன்றி சாத்தியமாகி இருக்காது. ஏனெனில் உங்கள் குடும்பத்தினரது வாழ்வில் மகிழ்ச்சியை சேர்க்கும் முயற்சியில் நீங்கள் ஒவ்வொருவரும் நாடெங்கும் மகிழ்ச்சியை விதைக்கிறீர்கள், ஒரு வீரராக பரிணமிக்கிறீர்கள்.

காகில்ஸ் வீரர்கள்

எமது வீரர்களை சந்தியுங்கள்

அவர்களோடு இணைந்து பயணிப்பவர்கள் என்ற வகையில் அவர்கள் அனைவரையும் ஒரு வீரராகவே நாளாந்தம் நாம் காண்கிறோம். அவர்களை மேலும் அறிந்து கொண்டோம், ஏனெனில் உங்களுக்கும் அதனை அறியத் தருவதற்காக.